திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு துறைமுகம் சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியிலிருந்து, துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அன்னை சத்தியா நகரில் ரூ.10 லட்சம் செலவில் உறைகிணறு அமைக்கும் பணியை திமுக மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன் , ’திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி சட்டப்பேரவை, நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியை பொது மக்களுக்காக பயன்படுத்திவருகின்றோம். குறிப்பாக தற்போது 20 இடங்களில் உறைகிணறு, ஆழ்கினறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளோம்.
கண்கட்டிய பின்னே சூரிய நமஸ்காரம் என சொல்வதுபோல், மழை வரப்போகிறது என தெரிந்தும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் உள்ளது. இதுபோல்தான் குடிநீர் தட்டுப்பாடு வரப்போகிறது என்று தெரிந்தும், நடவடிக்கைகள் எடுக்காமல் கடைசியாக அவசர அவசரமாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தினர். அந்த திட்டம் நிறைவடைய மூன்று வருடங்கள் ஆகும். அதுவரை பொதுமக்கள் என்ன செய்வார்கள். தொலைநோக்கு பார்வை இல்லாமல் அரசாங்கம் உள்ளது என்றார்.
இதையும் படியுங்க: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 'பிகில்' படப்பிடிப்பு!