ETV Bharat / state

குடிமராமத்துப் பணிகளில் ரூ.3 கோடி முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையிடம் திமுக புகார்! - அதிமுக அரசு மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்

சென்னை: காவிரி கால்வாயில் நடந்த குடிமராமத்துப் பணிகளில் 3 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கூறி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர். தியாகராஜன் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்த பி.டி.ஆர். தியாகராஜன்

author img

By

Published : Feb 24, 2021, 9:45 PM IST

சென்னையை அடுத்த ஆலந்தூரிலுள்ள லஞ்ச ஊழல் தடுப்புத் துறை அலுவலகத்தில் திமுக தகவல் ‌தொழில்நுட்ப‌ பிரிவு செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.டி.ஆர். தியாகராஜன், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் முறைகேடு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், காவிரி கால்வாயில் நடைபெற்ற குடிமராத்துப் பணிகளில் 3 ஆயிரத்து 158 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “காவிரி டெல்டா பகுதிகளில் குடிமாரத்துப் பணி விரிவாக்கப் பணியை பராமரிப்பு மறுசீராய்வு என நடைபெற்ற அனைத்து பணிகளுக்கான டெண்டர் முறை நடைபெற்றது. இந்த டெண்டர் முறையில் பொதுப்பணித் துறைக்கு ஒரு கோடி ரூபாய் வரையே டெண்டர் அனுமதிக்க அதிகாரம் உள்ளது.

ஆனால், விதிமுறைகளை முற்றிலும் பின்பற்றாமல் 3ஆயிரத்து158 கோடி ரூபாய் வரை முறைகேடாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் ஊழல் தடுப்புத் துறையில் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். நேற்று வெளியிடப்பட்ட நிதி அறிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியாகிறது. குறிப்பாக, ஒரு பக்கத்தில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை என்றும் மற்றொரு பக்கத்தில் பெரும் 84 ஆயிரம் கோடி தான் கடன் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது. 20ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என்று தெரியவில்லை.

இந்நிலையில் பத்தாயிரம் கோடி புதிதாக டெண்டர்களை உருவாக்கி கொடுத்துள்ளோம். குறிப்பிட்ட காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து மீட்க உதவும் எனத் தெரிவிக்கிறார்கள். அது முற்றிலும் பொய். இது வரை இதுகுறித்து அக்கறை செலுத்தாமல் திடீரென 37 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டெண்டரை விறுவிறுப்பாக வெளியிடுவதற்கு முறைகேட்டை நடைபெறவே ஏற்படுத்துகின்றனர். .

லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்த பி.டி.ஆர். தியாகராஜன்

ஏற்கனவே நீதிமன்றத்தால் இரண்டு டெண்டர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஊழல் தடுப்பு பிரிவு துறையில் புகார் அளிக்க வந்துள்ளோம். அங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இடைக்கால பட்ஜெட் குறித்து விவாதிக்க 3 நாட்கள் சட்டப்பேரவை கூடும் - சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.