ETV Bharat / state

நில அபகரிப்பு வழக்கு: மா. சுப்பிரமணியனுக்கு முன்பிணை! - DMK MLA M.Subbiramaniyan

சென்னை: அரசு நிலத்தை அபகரித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனாவுக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai HC
author img

By

Published : Jun 25, 2019, 3:08 PM IST

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான மா. சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

இது சம்பந்தமான வழக்கில் காவல் துறையினர் தங்களை கைது செய்யக்கூடும் என்பதால், மா. சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் தங்களுக்கு முன்பிணை வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

சென்னை
திமுக மா சுப்பிரமணியன்
அரசியல் காரணங்களுக்காகவே இந்த வழக்கு மா. சுப்பிரமணியன் மீது பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் மனுதாரர்களுக்கு முன்பிணை வழங்க வேண்டுமெனவும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஏ. நடராஜன், மனுதாரர்கள் போலி ஆவணங்கள், கையெழுத்து மூலம் அரசு நிலத்தை அபகரித்துள்ளனர் என்றும், அவ்வாறு அபகரிக்கபப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட மூன்று மாடி கட்டடம் விதிகளுக்கு புறம்பாகவும், உரிய அனுமதி இல்லாமலும் கட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் தேதி குறிப்பிடாமல் நீதிபதி இளந்திரையன் ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, திமுக எம்எல்ஏ மா. சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனாவுக்கு நிபந்தனை முன்பிணை வழங்கப்படுவதாக உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Intro:nullBody:அரசு நிலத்தை அபகரித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான மா.சுப்ரமணியன், அவரது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

இது சம்பந்தமான வழக்கில் காவல் துறையினர் தங்களை கைது செய்யக் கூடும் என்பதால், மா.சுப்ரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் இன்று நடைபெற்று வருகிறது. அரசியல் காரணங்களுக்காகவே இந்த வழக்கு மா.சுப்ரமணியன் மீது பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதனால் மனுதாரர்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஏ.நடராஜன், மனுதாரர்கள் போலி ஆவணங்கள் மற்றும் கையெழுத்து மூலம் அரசு நிலத்தை அபகரிக்கபட்டுள்ளது என்றும், அவ்வாறு அபகரிக்கபப்ட்ட நிலத்தில் கட்டப்பட்ட 3 மாடி கட்டிடம் விதிகளுக்கு புறம்பாகவும், உரிய அனுமதி இல்லாமலும் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் தேதி குறிப்பிடாமல் நீதிபதி இளந்திரையன் ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவிட்டு வழக்கை முடிந்து வைத்தார். Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.