ETV Bharat / state

கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்...! - கிராம சபை

திருவள்ளூர்: ஜமீன் கொரட்டூர் ஊராட்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.

கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொண்ட முக ஸ்டாலின்...!

author img

By

Published : Oct 2, 2020, 1:40 PM IST

அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி ஆண்டுதோறும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதனையடுத்து இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சிறப்பு கிராம சபை கூட்டம் ரத்து செய்து தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குள்பட்ட ஜமீன் கொரட்டூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிக அளவிலான பெண்கள் தகுந்த இடைவெளியுடன் உட்கார்ந்து கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேசிங்கு, பூவிருந்தவல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ விஜி ராஜேந்திரன், ஊராட்சித் தலைவர்கள் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின்னர் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ”தமிழ்நாடு அரசு வைரஸுக்கு பயப்படுவதைவிட திமுகவுக்கு பயந்து தமிழ்நாடு முழுவதும் நேற்றிரவு (அக்.1) கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துள்ளது. இன்று (அக். 2) காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.

ஆனால் அதில் அரசுக்கு எதிராக தீர்மானங்கள் போடக்கூடாது. கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என பல்வேறு விதிமுறைகளை வகுத்திருந்தது.

கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொண்ட முக ஸ்டாலின்...!

ஆனால் திமுக தரப்பில் அனைத்து திமுக ஊராட்சித் தலைவர்களும் மத்திய அரசு தற்போது ஏற்றுள்ள விவசாயிகள் விரோத சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோரிக்கை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அறிவித்திருந்தேன்.

இதை திமுக தலைவர்கள் மட்டுமல்லாமல் அதிமுக தலைவர்கள் பலர் இதை வரவேற்றுள்ளனர். ஏனென்றால் விவசாயம் என்பது கட்சி பாகுபாடு பார்த்து அல்ல விவசாயம் மக்கள் சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படக் கூடியவை ஆகும். ஆகையால் அதிமுக தலைவர்கள் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

இது குறித்து தகவல் தமிழ்நாடு முதலமைச்சர் சென்றதை அடுத்து இந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு வைரஸ் தொற்று ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுக் கூட்டம் என்று மாவட்டந்தோறும் செல்கிறார். அங்கு ஆயிரக்கணக்கான கூட்டத்தை கூட்டுவது வைரஸ் தொற்று பரவாது. ஆனால் தகுந்த இடைவெளியுடன் இதுபோன்ற ஒரு நூறு பேரை வைத்து நடத்தப்படும் கூட்டத்தில் வைரஸ் பரவுகிறதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “ தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் தற்போது புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியுள்ளது. எனவே இந்த மசோதாக்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...ஊராட்சிகளின் குரலை நெறிக்கும் முதலமைச்சர் - மு.க.ஸ்டாலின் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.