ETV Bharat / state

முதலமைச்சரே மேடைகளில் இனி ‘நான் ஒரு விவசாயி’ என்று சொல்லாதீர்கள்  - ஸ்டாலின் வேண்டுகோள்..! - DMK Leader MK Stalin condemned CM

சென்னை: விவசாய சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தான் ஒரு விவசாயி என்று முதலமைச்சர் மேடையில் சொல்ல வேண்டாமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்/

முதலமைச்சரே மேடைகளில் இனி ‘நான் ஒரு விவசாயி’ என்று சொல்லாதீர்கள் “ப்ளீஸ்” - ஸ்டாலின் வேண்டுகோள்..!

author img

By

Published : Sep 18, 2020, 4:03 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜக-வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் எதைக் கடுமையாக எதிர்த்து, மத்திய அமைச்சராக இருந்த ஹர்ஸிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா வரை சென்றுள்ளாரோ, அதற்குக் காரணமான, மத்திய பாஜக அரசின் சட்டங்களுக்கு விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு, மக்களவையில், அந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானவை என அறிந்தே, அதிமுக மகிழ்ச்சியுடன் ஆதரவளித்துள்ளது. இதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளின் விளைபொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்துக்கொள்ள வழிவகுக்கும், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டமும், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டமும் - தமிழ்நாடு விவசாயிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் வாழ்வில் சாவு மணி அடிக்கும் சட்டங்களாகும். ஆனால் இந்தச் சட்டங்களை, “விவசாயிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் சட்டங்கள்” என்றும், “தமிழ்நாடு பொருளாதாரத்தை உயர்த்தும் சட்டங்கள்” என்றும் கூறி அதிமுக ஆதரித்திருப்பது, விவசாயிகளுக்கு இதுவரை செய்த பாதகமெல்லாம் போதாது என்று மன்னிக்க முடியாத துரோகத்தையும் தற்போது செய்திருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த மூன்று சட்டங்கள் கார்ப்பரேட்டுகளின் கையில் விவசாயிகளை அடமானம் வைக்கும் அராஜக சட்டங்கள். மாநிலப் பட்டியலில் உள்ள வேளாண்மை விவகாரத்திலும், மூக்கை நுழைக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான, சகித்துக் கொள்ள முடியாத சர்வாதிகாரம். பாஜக அரசின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டுதான் - விவசாயிகளுக்கும், தமிழ்நாடு வேளாண் முன்னேற்றத்திற்கும் எதிரான இந்தச் சட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவையில் கடுமையாக எதிர்த்துள்ளது.

ஆனால் மத்திய பாஜக அரசின் இந்த விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆதரவளித்து, விவசாயிகளின் நலன் குறித்து, கொஞ்சம் கூட இரக்கமின்றி நடந்து கொண்டிருக்கிறார். முதலமைச்சர் பழனிசாமி அவர்களை நான் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்; இனியொரு முறை மேடைகளில் நின்று ‘நான் ஒரு விவசாயி’ என்று மட்டும் சொல்லாதீர்கள் ப்ளீஸ்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..தேர்வு முடிவுகள் வந்ததும் நீட் குறித்த சூர்யாவின் நிலைப்பாடு மாறும்: அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.