சென்னை, திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு முகக்கவசம், சானிடைசர், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ''கரோனா தொற்றைக் கட்டுபடுத்துவதற்கும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும் நிர்வாக ரீதியிலான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. கரோனா தொற்று காரணமாக உலக நாடுகளே பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துவரும் சூழலில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திட முன்மாதிரியான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்துவருகிறார்.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும், முகக்கவசம் அணிவதையும் தொடர்ந்து மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். தீவிர மருத்துவப் பரிசோதனை முகாம்கள் கிராமங்கள்தோறும், வீடுகள்தோறும் நடத்தப்பட்டுவருகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணி மிக விரைவில் தொடங்கும். குறைந்த விலையில், தரமான முகக்கவசம் வழங்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே திமுக போரட்டம் நடத்திவருகிறது. மின் கட்டணம் தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் விளக்கமளித்துள்ளார்'' என்றார்.
இதையும் படிங்க: சுகாதார செயலர் குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு!