சென்னை: திமுகவில் அண்மையில் நடந்த உட்கட்சித் தேர்தலைத் தொடர்ந்து அக்கட்சில் அமைப்பு ரீதியாக மாவட்டம், நகரம், பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. பின்னர், நடந்த தலைவர் தேர்தலில் போட்டியின்றி இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், திமுக உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பட்டியலைஅக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதன்படி, தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.ஸ்.பாரதி எம்பி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளன.
அதேபோல், அமைப்புச் சாரா ஓட்டுநர் அணியின் தலைவராக வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கப்பட்டு அதன் அணிச் செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உதயநிதி அமைச்சராக வர அனைத்து தகுதியும் கொண்டவர் - மா.சுப்பிரமணியன்