ETV Bharat / state

அக்டோபர் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு - Stalin to be elected President

திமுக பொதுக்குழு கூட்டம் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அக்டோபர் 9 ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம்- பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

author img

By

Published : Sep 28, 2022, 6:22 PM IST

இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்” நடைபெறும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். மாவட்ட அமைப்பு பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான முடிவுகள் 30ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் புதிய பொதுக்குழு தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 5ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்படவுள்ளது.

மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையிலும், முதலமைச்சரான பின் நடைபெறவுள்ள பொதுக்குழு என்பதாலும் முதலமைச்சரின் இல்லத்தில் இருந்து பொதுக்குழு நடைபெறும் இடம் வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:போலி ஆவணப் பதிவு ரத்து - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நடிகை வாணிஸ்ரீ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.