ETV Bharat / state

ஐபேக் இளைஞர் படையுடன் தேர்தல் களம் காணும் திமுக - DMK Facing election

எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஒவ்வொரு பரப்புரையிலும் மக்களை ஈர்க்கும் வகையில் புதிய பெயர்கள், பாடல்கள் என ஐபேக் இளைஞர் குழு திமுகவிற்கு பல்வேறு செயல் திட்ட யுக்திகளை அளித்து வருகிறது. இந்த யுக்திகள் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

DMK Facing election field with IPAC youth force

author img

By

Published : Feb 28, 2021, 3:08 PM IST

Updated : Feb 28, 2021, 3:31 PM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டின் மிக முக்கிய தேர்தல் என்பதால், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக வீரியத்துடன் பரப்புரை செய்து வருகின்றன. குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் வரவிருக்கும் தேர்தலுக்கான பணிகளை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கியது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த திமுக, இம்முறை எந்த விதத்திலும் வெற்றியை தவறவிடக் கூடாது என்ற முனைப்புடன் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக திமுக உடன் இணைந்து தேர்தல் வியூகம் வகுக்கும் குழுவான ஐபேக் நிறுவனமும் செயல்பட்டு வருகின்றது. மாநிலம் முழுவதும் மாவட்டந்தோறும் திமுக மேற்கொள்ளும் பரப்புரைகளுக்குத் தேவையான ஏற்பாடுகளை ஐபேக் கவனித்து வருகின்றது. கரோனா காலகட்டத்தில் திமுக முன்னெடுத்த 'ஒன்றிணைவோம் வா' தொடங்கி 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' வரை அனைத்திலும் ஐபேக் குழுவின் பங்கு உள்ளது.

இதை தவிர எந்த தொகுதியில் எந்த பிரச்னையை எடுத்துப் பேச வேண்டும், மக்களை ஈர்க்கும் விதத்தில் எப்படி அதனை வெளிப்படுத்த வேண்டும், பரப்புரைகளுக்கான மேடை அமைப்பது முதல் அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடி அதற்கு தேவையான ஆலோசனையையும் ஐபேக் குழு வழங்கி வருகின்றது.

சுவர் ஓவியங்கள், வீடு வீடாக பரப்புரை, மாறிவரும் காலத்திற்கேற்ப பொதுக் கூட்டங்களை டிஜிட்டல் உதவியுடன் கொண்டு செல்வது என ஐபேக் பல யோசனைகளை திமுகவிற்கு வழங்கி வருகிறது. ஆந்திரா பிரதேச தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் ஐபேக் நிறுவனத்துடன் தேர்தலை எதிர்கொண்டு மாபெரும் வெற்றியை சந்தித்தன. இந்நிலையில், ஐபேகின் திட்டங்கள் திமுகவிற்கு வரும் தேர்தலில் வெற்றியை அளிக்குமா, அப்படி வெற்றி பெற்றால் எத்தனைத் தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Last Updated : Feb 28, 2021, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.