ETV Bharat / state

"பொது இடங்களில் கவனத்துடன் பேச வேண்டும்" கட்சி நிர்வாகிகளுக்கு மு.க ஸ்டாலின் அட்வைஸ்!

author img

By

Published : Aug 5, 2023, 7:54 PM IST

பாஜகவினர் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்வார்கள் என்றும், அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும், பொது நிகழ்ச்சிகளில் அனைவரும் கவனமுடன் பேச வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக ஸ்டாலின்.

கட்சி நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் அட்வைஸ்!

சென்னை: திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள், கருணாநிதி நூற்றாண்டு விழா பணிகள், புதிய நிர்வாகிகள் நியமனம், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வரும் 7ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் மிகப்பெரிய நினைவுப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான ஏற்பாட்டை செய்வதற்காக சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஆண்டு முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடவும் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி ராமநாதபுரத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி நடைபெறுவது குறித்தும், அதற்கான பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’இதெல்லாம் தலைவருக்கு மட்டும் தான் நடக்கும்’... தனியார் நிறுவன அறிவிப்பால் மார்தட்டி கொள்ளும் ரஜினி ரசிகர்கள்!!

தொடர்ந்து, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் மற்றும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "கலைஞர் நூற்றாண்டு விழாவினை வெறும் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், கொள்கைத் திருவிழாவாக கொண்டாடுவோம்.
திமுக அனைத்து தொண்டர்களுக்கும் பொதுவானது. நிர்வாகிகளுக்கு மட்டுமே சொந்தமில்லை. ஆட்சி அனைவருக்கும் பொதுவானது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே சொந்தமல்ல" என்று தெரிவித்தார்.

மேலும் "திமுகவினர் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து ஒற்றைச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராகிவிட்டோம். பாஜகவை பொறுத்தவரையில் இது அவர்களுக்கு 'வாழ்வா சாவா' என்ற தேர்தல், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அவர்கள் எதையும் செய்வார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து வருவதால் நம்மை நோக்கிப் பாய்வார்கள்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முக ஸ்டாலின், "கடந்த காலங்களில் இதுபோன்ற பல தடைகளை சமாளித்து நாம் வெற்றி பெற்றது போல, இம்முறையும் நாம் முழுமையான வெற்றியைப் பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம். அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பொது நிகழ்ச்சிகளில் கவனமுடன் பேச வேண்டும்" என அறிவுரை கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் உலா வரும் டபுள் டெக்கர் பேருந்து… சென்னைவாசிகள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.