ETV Bharat / state

திமுகவில் இருந்து விலகல் ...அரசியலில் இருந்து ஓய்வு...சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை - சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் இருந்து விலகுவதாகவும், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகல்

author img

By

Published : Sep 20, 2022, 10:19 AM IST

சென்னை: திமுக துணைப்பொதுச் செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக சமீபத்தில் வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்ததாவது,

"2009 இல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல், கட்சிப்" பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞரிடமே தெரிவித்துவிட்டேன்.

தலைவர் கலைஞர் மறைவுக்குப்பின், அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகல்
திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகல்

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று தலைவர் முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியன்று பதிவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவருக்கு அனுப்பிவிட்டேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா? சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.