திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேற்று(மார்ச்.6) நடைபெற்ற சந்திப்பில், திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதிகள் பங்கீடு உறுதி செய்யப்பட்டது. அதன்படி, 25 சட்டப்பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், ஒரு ராஜ்யசபா இடத்தையும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தையின்போது, திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி எம்பி, காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சட்டப்பேரவை குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
திமுக - காங்கிரஸ் தொகுதிகள் பங்கீடு ஒப்பந்தம் மார்ச்.7 ஆம் தேதி காலை 10 மணிக்கு கையெழுத்தாகிறது என, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.