திமுக மீது அவதூறு பரப்பும் வகையில், மாரிதாஸ் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், அவர் மீது ஐபிசி 505(2), ஐ.டி சட்டவிதிகள் படி நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகார் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது ட்விட்டர் பகத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ''திமுகவிற்கு ஆதரவு குரல் என்றால் அதுக கருத்து சுதந்திரம்... ஆனால் வலிமையான குரலால் திமுகவிற்கு வலி ஏற்படுத்தினால் கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெறிக்கப்படுகிறது என புகார் அளிக்க வேண்டியது. முதுகெலும்பு இருக்கிறது என பெருமை பேசும் திமுக முதுகெலும்பு இல்லாததை நிருபித்து இருக்கிறது'' என அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக ஒரு ட்விட்டில்,'' மக்கள்நலனை மறந்து ஆளும் அரசுக்கு எதிராக யார் போராடினாலும் உடனே ஓடோடி ஆதரிப்பது தான் எதிர்கட்சிகளின் வேலையா?" எனப் பதிவிட்டிருந்தார்.
மாநிலம் தழுவிய அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்திற்கு திமுக, இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.