சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சென்னையில் உள்ள 658 அம்மா உணவகங்களில் 7.5 லட்சம் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் குடிசை பகுதிகளில் உள்ள 26 லட்சம் பேருக்கு தலா மூன்று முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
மதுக்கடைகளை மூட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "மதுக்கடைகளை மூடுவது என்பது சமூக பிரச்னை. குடி பழக்கத்தைக் கற்று கொடுத்ததே திமுக தான். திமுகவினர் வைத்துள்ள மது ஆலைளை மூடி முன் உதாரணமாக செயல்பட முடியுமா? தமிழ்நாட்டிற்கு மதுவிலக்கு கொண்டு வருவது அதிமுகவின் லட்சியம். அதற்கு கொஞ்சம் நேரமாகும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் திறப்பு: தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் புதுச்சேரி மதுப்பிரியர்கள்