ETV Bharat / state

நாசா போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டு மாணவர்களை நேரில் வாழ்த்திய ஸ்டாலின்! - ஸ்டாலின் ட்வீட்

சென்னை : அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நடத்திய செயற்கைக்கோள் போட்டியில் வெற்றிபெற்ற கரூர் மாணவர்களை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

MK Stalin
MK Stalin
author img

By

Published : Oct 15, 2020, 3:47 PM IST

Updated : Oct 15, 2020, 4:12 PM IST

ஐஎன்சி (INC) என்ற நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ’கியூப் இன் ஸ்பேஸ்’ என்ற போட்டியை முன்னதாக நடத்தியது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் வடிவமைத்த செயற்கைகோள், நாசா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2019-20ஆம் ஆண்டுக்கான இந்தப் போட்டியில் கரூர் மாணவர்கள் உருவாக்கியுள்ள செயற்கைகோள் தேர்வாகியுள்ளது. அம்மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான அட்னன், கேசவன், அருண் ஆகியோர், அறிவியல் மீது ஏற்பட்ட தீரா காதல் காரணமாக இந்தப் புதிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர். வலுவூட்டப்பட்ட ’கிராபோன் பாலிமர்’ என்ற மூலப்பொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் செயற்கைக்கோளுக்கு ’இந்தியன் சார்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்மாணவர்களை சந்தித்தது குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டாலின், "தமிழ்நாடு மாணவர்களான அட்னன், கேசவன், அருண் ஆகியோர் தயாரித்த சிறிய வகை செயற்கைக்கோள், நாசா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்.

இம்மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கரூர் மாவட்டக் கழகம் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிதியை இன்று வழங்கினேன். அனைத்துத் துறைகளிலும் நம் தமிழ்நாட்டு மாணவர்கள் தலைநிமிர வேண்டும். வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பற்றி எரியும் அண்ணா பல்கலைக்கழகம் - உதயநிதி

Last Updated : Oct 15, 2020, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.