மதுரவாயில் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் திமுக சார்பில் காரப்பாக்கம் கணபதி போட்டியிடுகிறார். இவர் போரூர் கார்டன் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று (மார்ச்.21) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவித்திருக்கிறது. இதை வரவேற்கும் வகையில், திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதிக்கு சிலம்ப விளையாட்டு வீரர்கள் சிலம்பம் சுற்றி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக சென்னை மாவட்டச் செயலர் சீனிவாசன் தலைமையில் மாஸ்டர்கள் சாமி, சுரேஷ் ஆகியோர் திமுக வேட்பாளரை சந்தித்து ஆதித்தமிழன் தற்காப்பு கலை சார்பில் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே, திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி சிலம்பம் சுற்றியவாறு வீரர்களை ஈர்த்து வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து அவர்களிடையே பேசிய அவர், ”மதுரவாயில் தொகுதியில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். ஆனால் இங்கு விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ள போதுமான வசதிகளுடன் மைதானம் இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் மதுரவாயில் தொகுதியில் விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக அனைத்து வசதிகளுடன் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்” என உறுதியளித்தார்.
இதையும் படிங்க:’இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பில்லை’ - வைகோ பேச்சு