சென்னை: மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடந்த வாரம் பாஜக அல்லாத 8 முதலமைச்சர்கள் மற்றும் 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பலருக்கு ஜூன் 15ஆம் தேதி டெல்லியில் உள்ள அரசியலமைப்பு கிளப்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்புவிடுத்தார்.
இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு கலந்து கொள்கிறார். மேலும் இன்று (ஜூன்.15) நடைபெறும் கூட்டத்தில் திமுக சார்பில் பொது வேட்பாளரை முன்மொழியத் திட்டமிட்டுள்ளதாகக் கட்சியின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் திமுக நான்காவது பெரிய கட்சி என்பதால், இந்த செயல்பாட்டில் அது முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் வியூகங்களை வகுக்க சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மற்ற எதிர்க்கட்சிகளுடன் பொதுவான வியூகத்தை வகுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக இந்த கூட்டத்தை நடத்த உள்ளார்.
இதையும் படிங்க: குடியரசு தலைவர் தேர்தல் - திமுகவின் நிலைப்பாடு என்ன?