கரோனா பரவல் தடுப்பில் மத்திய - மாநில அரசுகளின் நிலைபாடுகள் குறித்து விவாதிக்க திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி (இன்று) நடைபெறயிருந்தது. ஆனால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க தேனாம்பேட்டை காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. அதில் அரசியல் செய்ய திமுக விரும்பவில்லை. எனவே, அந்தக் கூட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்வியை ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை அம்பேத்கர்: மு.க. ஸ்டாலின்!