ETV Bharat / state

EWS 10% இட ஒதுக்கீடு செல்லும்: முதலமைச்சரின் அடுத்த கட்ட மூவ் என்ன? - திமுக மூத்த வழக்கறிஞர்

author img

By

Published : Nov 7, 2022, 6:27 PM IST

EWS 10% இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாகவும், இதற்கு சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கலந்துபேசி முடிவு எடுக்கப்படும் எனவும் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (நவ.7) தீர்ப்பு வழங்கியது. ஐந்து பேர் கொண்ட சாசன அமர்வில் மூன்று நீதிபதிகள் இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு ஆதரவாகவும், இரண்டு நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு தொடர்பாக, சென்னை பாரிமுனையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக, முதன்முதலில் வழக்குத்தொடர்ந்தது திமுகதான் எனவும்; இந்த சட்டம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுவரப்பட்ட சட்டமல்ல எனவும் வாதிட்டதாக கூறினார்.

மேலும் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும்; இதனால் மற்ற பிரிவினர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனவும் வில்சன் கூறினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாகவும், இதற்கு சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்த வில்சன் இந்த தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எந்தவிதப்பாதிப்பும் வராது எனவும் விளக்கம் அளித்தார்.

பிறகு சென்னை தலைமைச்செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த அவர் உச்ச நீதிமன்றம்
உயர்வகுப்பிலுள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பில் அடுத்தகட்ட முடிவினை முதலமைச்சர் எடுப்பார் எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு' - EWS 10% இட ஒதுக்கீடு தீர்ப்புக்கு முதல்வர் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.