கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்ற தேமுதிக நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை (அக்டோபர் 7) காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறிகுறி இல்லாத கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் வழக்கமான மருத்துவப் பரிசோதனை எனக் கூறப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு நிராகரிக்கப்படுமா? - அக். 16 இல் தீர்ப்பு