ETV Bharat / state

சென்னையில் விநாயகருக்கு போட்டியாக களமிறங்கிய பெரியார்...! - chennai city news

சென்னை: விநாயகர் ஊர்வலத்தை எதிர்க்கும் விதமாக சென்னை மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் அருகில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் சிலை ஊர்வலம் நடத்த முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

dk party done periyar rally against ganesh chadurthi rally
author img

By

Published : Sep 9, 2019, 9:38 AM IST

சென்னை மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்டில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் பெரியாரை போற்றும்விதமாக பொறிக்கப்பட்ட பதாகைகள் ஏந்தி கோஷமிட்டபடி விநாயகர் ஊர்வலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் வாகனத்தில் பெரிய சிலையையும் கைகளில் சிறியவகை சிலைகளையும் ஏந்தியபடி ஊர்வலம் மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் கூறுகையில், "தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் இந்துத்துவ இயக்கங்கள் மதக் கலவரத்தை தூண்ட எண்ணுகின்றன.

குறிப்பாக பிற மதத்தினர் வாழ்கின்ற பகுதியில் கட்டாயமாக விநாயகர் சிலைகளை கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இவர்களிடம் உண்டு.

இவர்கள் காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறி, கலவரம் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதை கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் காவி கூட்டமானது வணிகர்கள், மக்களை அச்சுறுத்தி பணம் வசூல் செய்வது அதிகரித்துவருகிறது.

அரசு இதை கவனத்தில்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விநாயகர் ஊர்வலத்தை தடைசெய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்றார்.

சென்னையில் விநாயகர் ஊர்வலத்துக்கு போட்டியாக பெரியார் சிலை ஊர்வலம்

பின்னர், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு எதிராக பெரியார் சிலைகளை ஏந்தி போட்டி ஊர்வலம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Intro:Body:விநாயகர் ஊர்வலத்தை எதிர்க்கும் விதமாக சென்னை மீசாப்பேட்டை மார்கெட் அருகில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் சிலை ஊர்வலம் நடத்த முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை மீசாப்பேட்டை மார்கெட்டில் 200க்கும் மேற்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தை சார்ந்தவர்கள் பெரியார் பதாகைகள் ஏந்தி கோஷம் இட்டு விநாயகர் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு சமந்தமில்லாத பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் இந்துத்துவ இயக்கங்கள் மத கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் விநாயகர் ஊர்வலங்கள் நடத்தி கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக பிற மதத்தினர் வாழ்கின்ற பகுதியில் கட்டாயமாக விநாயகர் கொண்டு செல்ல வேண்டும் என கூறி காவல் துறை தடையை மீறி கலவரம் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதை கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் காவி கூட்டம் வணிகர்கள், மக்களை அச்சுறுத்தி பணம் வசூல் செயவது அதிகரித்து வருகிறது. உடனடியாக அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விநாயகர் ஊர்வலத்தை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.