ETV Bharat / state

தேர்தல்: காவல் உயர் அலுவலர்களுடன் செங்கல்பட்டு ஆட்சியர் ஆலோசனை

author img

By

Published : Mar 4, 2021, 7:18 PM IST

சென்னை: தேர்தலில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் உயர் அலுவலர்களுடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
collector meeting

சென்னை தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிதல், அந்த வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை உயர் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் இன்று (மார்ச் 4) ஆலோசனை நடத்தினார்.

தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடையாறு துணை ஆணையர் விக்ரமன், பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் உள்ளிட்ட காவல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்குச்சாவடியில் வந்து வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் உயர் அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:திமுக-காங். கூட்டணி தொடர்வது குறித்த முடிவு மார்ச் 6இல் வெளியாகும்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.