ETV Bharat / state

சினிமாவில் சண்டைக்காட்சிகளின்போது ஆயுதம், ரத்தம் குறித்த எச்சரிக்கை வழக்கு: தள்ளுபடி - புகைப் பிடிப்பது மது அருந்தும் காட்சிகள்

திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளின் போது ஆயுதங்கள் மற்றும் ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற உத்தரவிட கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளின் போது ஆயுதம் மற்றும் ரத்தம் குறித்த எச்சரிக்கை- வழக்கு தள்ளுபடி

author img

By

Published : Jun 8, 2022, 4:52 PM IST

சென்னை: கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ’வன்முறை, கொலை, கொள்ளை போன்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 16 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எந்த வித தயக்கமும் இன்றி இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கெல்லாம் அடிப்படையாக சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகள் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். திரையரங்கை நோக்கி ரசிகர்களை வர வைப்பதற்காக நடிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வன்முறைக் காட்சிகளை பார்க்கும் இளைஞர்களும் அதன் உண்மை தன்மையைப் பகுத்தறிய முடியாமல், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை தொலைத்துவிடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சினிமாவில் வன்முறை காட்சி வரும்போது "இதில் பயன்படுத்தப்படும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பேப்பரில் செய்யப்பட்டன", "சிவப்பு நிறத்தில் சிந்துவது ரத்தமல்ல; வெறும் கலர் பவுடர் தான்" போன்ற வாசகங்களை இடம்பெற உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது தொடர்பான காட்சிகள் வரும்போது விழிப்புணர்வு வாசகங்களைப் போன்று சண்டைக்காட்சிகளிலும் இடம்பெறச்செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, திரைப்பட காட்சிகளை பார்த்து தான் பள்ளி மாணவர்கள் தங்கள் புத்தகப்பைகளில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் வருவதாக மனுதாரர் தெரிவித்தார்.

இதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பொது நல வழக்குத் தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தனர்.

இதையடுத்து மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள மனுதாரர் அனுமதிகோரியதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:இந்திய திரைப்பட வரிசையில் 'ஜெய்பீம்' சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.