ETV Bharat / state

ஆன்லைன் கேம் தடை சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனு வாபஸ் - ஏன்?

author img

By

Published : Nov 16, 2022, 4:19 PM IST

ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

ஆன்லைன் விளையாட்டு தடை அவசர சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனு வாபஸ் - நீதிமன்றம்

சென்னை: ஆன்லைன் விளையாட்டுக்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரியும், ரத்து செய்யக்கோரியும், மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 'அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும் அது அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால், இந்த வழக்கைத் தொடர எந்த காரணமும் இல்லை' எனத் தெரிவித்தார்.

மேலும், அவசரச் சட்டத்துக்குப் பதிலாக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம், முகுல் ரோத்தகி, சதீஷ் பராசரன் ஆகியோர், அவசரச்சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அது அமலில் உள்ள சட்டமாகத் தான் கருத வேண்டும். அவசரச் சட்டத்திற்கு மாற்றாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தபிறகு தான், அவசரச் சட்டம் காலாவதி ஆகும் எனக் குறிப்பிட்டனர்.

அவசரச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அலுவலர்கள் முனைப்பு காட்டுவதால் அது அமலுக்கு வரும் தேதி அறிவித்த சில நாட்கள் வரை நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், அவசரச் சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்காத நிலையில், இந்த வழக்கு தொடர்வதற்கு எந்த காரணமும் இல்லை எனக் குறிப்பிட்டனர். மேலும், மனுதாரர்கள் தரப்பில் அவசரச் சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவித்த பிறகு புதிதாக வழக்குத் தொடர்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்த நீதிபதிகள் அவசரச்சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவித்த பிறகு வழக்குத் தொடர்வதற்கு ஆன்லைன் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: முல்லை பெரியாறு..15 மரங்களை வெட்ட அனுமதி கோரி தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.