ETV Bharat / state

ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: ஆவடி தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்.விஸ்வநாதன்  எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி  2021 தேர்தல்  ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி  Dismissal of case seeking postponement of elections in Avadi constituency  TN Election 2021  MGR Viswanathan  M.G.R.Makkal Katchi
Dismissal of case seeking postponement of elections in Avadi constituency
author img

By

Published : Mar 29, 2021, 12:33 PM IST

சென்னை, பட்டாபிராமைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கடந்த 2016ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை திருப்பி அளித்து விட்டு எம்ஜிஆரை நினைவுபடுத்தும் வகையில் ஆட்டோ ரிக்‌ஷா, தொப்பி ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்துள்ளேன். எங்கள் கட்சி சார்பில் ஆவடி, எடப்பாடி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.

இதில், ஆவடி தவிர மற்ற தொகுதிகளில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி தொகுதியில் பொதுசின்னப் பட்டியலில் ஆட்டோ ரிக்‌ஷா இருந்தும் அதை எனக்கு ஒதுக்கவில்லை, அதனால் தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும், ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சின்னங்கள் கேட்பது, ஒதுக்குவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால், மனுதாரர் கோரிக்கையை பரிசீலிக்க வாய்ப்பில்லை எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனை ஏற்று, ஆவடி தேர்தலை தள்ளிவைக்க கோரிய எம்.ஜி.ஆர்.விஸ்வநாதனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'டார்ச்லைட்' எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கா, மக்கள் நீதி மய்யத்திற்கா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.