சென்னை: தமிழ்நாட்டிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, பகுதி நேரம், நேரடி இரண்டாம் ஆண்டு ஆகியவற்றில் இணைய ஜூன் 25 முதல் ஜூலை 28ஆம் தேதி மாலை 5 மணி வரை, https://tngptc.in என்ற வலைதள முகவரியின் மூலமாக மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
முதலாம் ஆண்டு பகுதி நேரம் பட்டயப்படிப்புகளில் இணைய, 2020-2021ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு மட்டும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. பிற மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகளில், மொத்தம் 18 ஆயிரத்து 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இதுவரை முதலாம் ஆண்டில் சேர்வதற்காக 18 ஆயிரத்து 875 மாணவர்களும், பகுதி நேர பட்டயப் படிப்பில் சேர ஆயிரத்து 199 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில், தரவரிசைப்பட்டியல் தயார் செய்யப்பட்ட பின்னர், கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ பள்ளி தேர்வு முடிவு எப்போது?