சென்னை: ஜூலை 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை டிப்ளமோ நர்ஸிங் படிப்புகளில் சேர்வதற்கும், தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள பார்ம் டி பட்டயப்படிப்பில் சேர்வதற்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் டிப்ளமோ, நர்ஸ் படிப்புகளில் சேர்வதற்கும், தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள பார்ம் டி பட்டயப்படிப்பில் சேர்வதற்கும் நாளை (17 ஜூலை) முதல் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பார்ம் டி மற்றும் டிப்ளமோ நர்ஸிங் பட்டயப் படிப்பிற்கு ஜூலை 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை www.tnhealth.tn.gov.in/ www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்'' எனக் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் www.tnhealth.tn.gov.in/ www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ''விண்ணப்பங்களை ஜூலை 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 26ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. 24 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பார்ம் டி(Pharm D) பட்டயப் படிப்பில் உள்ள 720 இடங்களில் 448 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன. 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள டிப்ளமோ நர்ஸிங் படிப்புகளில் 2060 இடங்கள் நிரப்பப்பட உள்ளன'' என அதில் கூறப்பட்டுள்ளது.