ETV Bharat / state

'தற்போது எமனின் கையில் இருப்பது பாசக்கயிறு அல்ல பாசவலை': இயக்குநர் பேரரசு ட்வீட் - corona news in tamil

தற்போது எமனின் கையில் இருப்பது பாசக்கயிறு அல்ல, பாசவலை என்றும்; நம் அலட்சியமும் பொறுப்பின்மையும் நாம் தற்கொலை செய்வதற்கும் பிறரை கொலை செய்வதற்கும் சமமாகிவிடும் என்று தெரிவித்து இயக்குநர் பேரரசு கவிதை ஒன்றை ட்வீட் செய்துள்ளார்.

director-perarasu-tweet-on-covid-deaths
'தற்போது எமனின் கையில் இருப்பது பாசகயிறு அல்ல பாசவலை' இயக்குநர் பேரரசு ட்வீட்
author img

By

Published : May 17, 2021, 10:13 PM IST

சென்னை: நாள்தோறும் மரணச் செய்திகளை நாம் கேட்டவண்ணமே உள்ளோம். சிலர் தங்களின் அன்புக்குரியவர்களை இந்தக் கரோனா தொற்றுக்கு இழந்திருக்கிறார்கள். முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் பலரும் கரோனா தொற்று எவ்வளவு ஆபத்தானது என்று புரியமறுக்கிறார்கள்.

director-perarasu-tweet-on-covid-deaths
இயக்குநர் பேரரசு ட்வீட்

ஊரடங்கில் வீட்டிலேயே இருப்பதன் மூலம் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் எனப் பலரும் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில் இயக்குநர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

தினமும் தெரிந்த முகங்களின் மரணம்!

நேரில் பார்க்க முடியாத அவலம்!

கடந்த வந்த காலங்களில் இதுவே கொடூரமான காலம்!

தற்போது எமனின் கையில் இருப்பது பாசக்கயிறு அல்ல பாசவலை!

நம் அலட்சியமும் பொறுப்பின்மையும் நாம் தற்கொலை செய்வதற்கும் பிறரை கொலை செய்வதற்கும் சமமாகிவிடும்!

வாழ்வோம்! வாழ வைப்போம்

என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.

உண்மைதான் நம் அலட்சியமும் பொறுப்பின்மையும் பிறரை கொலை செய்வதற்கு சமம்தான்.

இதையும் படிங்க: உண்மையான தமிழ்ப்பற்று இருந்தால் போராடுங்கள்- இயக்குநர் பேரரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.