ETV Bharat / state

காசோலை மோசடி வழக்கு: தண்டனையை எதிர்த்து இயக்குநர் லிங்குசாமி மேல்முறையீடு! - Director Lingusamy cheque fraud

காசோலை மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

காசோலை மோசடி வழக்கு: இயக்குனர் லிங்குசாமி மேல்முறையீடு!

author img

By

Published : Apr 22, 2023, 10:46 PM IST

சென்னை: கடந்த 2014ஆம் ஆண்டில் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை தயாரிப்பதற்காக, ‘நான் ஈ’ மற்றும் ‘இரண்டாம் உலகம்’ போன்ற படங்களைத் தயாரித்த பி.வி.பி கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து, 1 கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக, பங்குதாரர் என்ற முறையில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கடனாகப் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து, இந்த கடனுக்காக இயக்குனர் லிங்குசாமி கொடுத்த 1 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி உள்ளது. இதனால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்தது. இந்த நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், அதன் நிர்வாகிகளான இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு நாளை மறு நாள் (ஏப்ரல் 24) விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம் போட்ட உயர் நீதிமன்றம் - என்னவாம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.