முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் கோரிக்கைவிடுத்து இன்று (நவ.19) #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் காலையில் இருந்து ட்விட்டர் வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
-
#ReleasePerarivalan pic.twitter.com/VjIxlEkZG4
— Bharathiraja (@offBharathiraja) November 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#ReleasePerarivalan pic.twitter.com/VjIxlEkZG4
— Bharathiraja (@offBharathiraja) November 20, 2020#ReleasePerarivalan pic.twitter.com/VjIxlEkZG4
— Bharathiraja (@offBharathiraja) November 20, 2020
#ReleasePerarivalan இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திரைப் பிரபலங்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். அந்தவகையில், இயக்குநர் பாரதிராஜா இது குறித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை. ஆளுநர் முடிவெடுத்து விடுவிக்காலம் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்து அறிவித்தும் தமிழ்நாடு அரசு, அனைத்துக் கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்து வருத்தத்துக்குரியது.
பேரறிவாளன் விடுதலைக்காக ஒரு தாய் 30 வருடமாக சட்ட போராட்டங்கள் நடத்தி ஒரு விடியற்காலை பொழுதுக்காக கண்ணீர் மல்க காத்திருப்பது வேதனைக்குரியது. மதிப்புக்குரிய ஆளுநர், ஆட்சியாளர்களே மன்றாடி கேட்கிறோம் மனதுவைங்கள்... உடனே விடுதலை தாருங்கள்" எனக் கூறியுள்ளார்.