ETV Bharat / state

ஒரு கோடி பயனாளிகளுக்கு நீரிழிவு, ரத்த அழுத்த நோய் மருந்துகள் வழங்கல்! - Minister Ma. Subramanian

டிசம்பர் மாத இறுதிக்குள் ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து, நீரிழிவு, ரத்த அழுத்த நோய்க்கான மருந்துகள் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Aug 6, 2021, 8:12 PM IST

சென்னை: மேற்கு மாம்பலத்தில் உள்ள பொது சுகாதார மைய மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சை மருத்துவ உபகரணமான ஹெபாஃபில்ட்டர் பயன்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறிய இடத்தில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை, தற்போது அனைத்து நவீன வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக மாறியுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

11 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு

மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கும் வகையில், என்னுடைய ஒரு மாத சம்பளத்தை அளிக்கிறேன். மேலும் தி.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதியும் தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக அளிக்க இருக்கிறார்.

நாளை (ஆக.7) சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில், கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 11 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன.

நம் மாநிலத்தின் தேவை 12 கோடி தடுப்பூசிகள் ஆகும். அதில் 2 கோடி தடுப்பூசிகளே கிடைத்துள்ளன. மேலும் 9 கோடி கரோனா தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும். அதேபோல் இந்த மாதம் 79 லட்சம் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க உள்ளது.
தாய் பாலூட்டும் அறை சீரமைப்பு

அவைகள் கிடைத்தால் இந்த மாதம் செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை 3 கோடியை எட்டும். மேலும் தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர், 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர். கடந்த ஆட்சியில் பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் அறைகள் திறக்கப்பட்டன.

இருப்பினும் அங்கு மின் விசிறி உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லை. பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் தாய்ப்பால் ஊட்டும் அறைகள் சீரமைக்கப்படும்.

தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், சைதாப்பேட்டையில் உள்ள பேருந்து நிலையத்தில் தாய் பாலூட்டும் அறை அமைக்கப்படும். டிசம்பர் இறுதிக்குள் ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து , நீரிழிவு, ரத்த அழுத்த நோய்க்கான மருந்துகள் வழங்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: 'ஆன்லைன் மருந்து விற்பனையை நெறிப்படுத்த வேண்டும்' - மருந்து வணிகர்கள் சங்கம் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.