ETV Bharat / state

சென்னையில் டிஜிபி அலுவலக ஊழியர் சந்தேக மரணம்! - DGP office IT dept employee died news

சென்னை: திருவல்லிக்கேணி லாட்ஜில் காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலக தொழில்நுட்ப பிரிவு அலுவலர் சந்தேக மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னையில் டிஜிபி அலுவலக ஊழியர் சந்தேக மரணம்!

author img

By

Published : Mar 5, 2021, 10:03 AM IST

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (51). இவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவு அலுவலராக பணிபுரிந்துவந்தார். சுரேஷ் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து திருவல்லிக்கேணி தசுதீன் கான் தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கி வந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அலுவலகத்திற்கு செல்லாமல் சுரேஷ் குமார் லாட்ஜிலே தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு (மார்ச் 4) சுரேஷ்குமார் தனது அறையில் தூங்க சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 5) காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார் சுரேஷ். சந்தேகமடைந்த லாட்ஜ் மேனேஜரான மசூத் அறையை திறந்து உள்ளே பார்த்த போது, சுரேஷ் தரையில் கிடந்துள்ளார். உடனடியாக மேனேஜர் திருவல்லிக்கேணி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் காவல் துறையினர் விரைந்து சுரேஷ்குமாரை மீட்டு ஓமந்தூரர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சோதித்து பார்த்த மருத்துவர்கள் சுரேஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து திருவல்லிக்கேணி காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து உடல் நிலை சரியில்லாமல் இறந்துள்ளாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...குட்டி நாயைத் தத்தெடுத்து தாயான ஆண் குரங்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.