ETV Bharat / state

கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றக் கோரிய வழக்கில் உத்தரவு

author img

By

Published : Nov 1, 2022, 3:51 PM IST

கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையை, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை
கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலை குறுகலாக இருப்பதால் ஏராளமான விபத்துகள் நடப்பதாகவும், 2016 முதல் 2021 வரையிலான ஆண்டுகளில் நடந்த 715 விபத்துக்களில் 169 பேர் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

திருவண்ணாமலை, திருப்பதி, பழனி போன்ற வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் இந்த சாலையில் சர்க்கரை ஆலைகள் உள்ளதால் சரக்கு வாகனங்கள் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இதனை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்ட போதும், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சாலையை தரம் உயர்த்தும் பட்சத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கான பயண நேரம் இரண்டரை மணி நேரம், 45 நிமிடங்களாக குறைந்து விடும் எனக் குறிப்பிட்டுள்ளார். நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த போதும், மத்தியிலும், மாநிலத்திலும் இரு வேறு கட்சிகள் ஆட்சியில் இருப்பதால், திட்டத்தை அமல்படுத்துவதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுசம்பந்தமாக மத்திய - மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலித்து, இச்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: சிவிங்கி புலிகள் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்...!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.