ETV Bharat / state

'குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்' - தேர்தல் ஆணையம்

author img

By

Published : Mar 22, 2021, 10:37 PM IST

சென்னை: குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களையும், அவர்கள் குறித்த விவரங்களையும் நாளைமுதல் பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

election commission
"குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்"- தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுவருகிறது. இந்நிலையில் குற்றப் பின்னணியைக் கொண்ட வேட்பாளர்கள் குறித்து விவரங்களை, வாக்குப்பதிவிற்கு முன்பாக, மூன்று முறை பத்திரிகைகளில் வெளியிட வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதனடிப்படையில், முதல் முறையாக மார்ச் 23 முதல் 25ஆம் தேதிக்குள்ளாகவும், இரண்டாவது முறையாக மார்ச் 26 முதல் 30ஆம் தேதிக்குள்ளாகவும், மூன்றாவது முறையாக மார்ச் 31 முதல் ஏப்ரல் 4ஆம் தேதிக்குள்ளாகவும் என மொத்தம் மூன்று முறையாக குற்றப் பின்னணி விவரங்களை வெளியிட வேண்டுமென தெரிவித்தது.

பின் அவர்கள் குறித்து, படிவத்தில் நிலுவையிலுள்ள வழக்கு விவரம், எந்த நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, குறைந்தபட்சமாக விதிக்கப்பட்ட தண்டனை விவரம் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

இந்தப் படிவத்தைப் பூர்த்திசெய்து அதனை அப்படியே பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். இது குறித்த விவரத்தை தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து 30 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'கரோனா தடுப்பு நடவடிக்கையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.