ETV Bharat / state

MTC Small Bus: சென்னையில் 50% மினி பஸ் சேவை குறைக்கப்பட்டதா..? - மாநகர போக்குவரத்து கழகத்தின் விளக்கம் என்ன? - tn govt

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், புறநகர் வழித்தடங்களில் சிறிய பேருந்துகளை இயக்குவதைக் குறைத்து விட்டதாகவும், 50 விழுக்காடு பேருந்துகளை மட்டும் இயக்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

MTC Small Bus: சென்னை புறநகர் பகுதிகளில் மினி பேருந்துகள் பற்றாக்குறையா?

author img

By

Published : May 3, 2023, 7:36 AM IST

சென்னை: கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, 200 சிறிய பேருந்துகளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பேருந்து வசதி இல்லாத பகுதிகளுக்கு தொடங்கி வைத்தார். மேலும், பேருந்துகள் சேவை இல்லாத பல பகுதிகளை பிரதான சாலைகள் உடன் இணைத்ததால், போக்குவரத்து நெரிசல் இருந்த போதிலும், சிறிய பாதைகளில் குறிப்பிட்ட வேகத்தில் செல்ல வசதியாக இருந்ததால், இந்தத் திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.

இதனையடுத்து 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் தொலைதூர குடியிருப்பு பகுதிகளுக்கு இணைப்பை அதிகரிக்க, மேலும் 100 கூடுதல் மினி பேருந்துகள் இயக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் மாநகரில் இயக்கப்படும் சிறிய பேருந்துகளின் எண்ணிக்கை 200இல் இருந்து 300 ஆக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பினை நிறைவேற்றவில்லை.

எனவே, ஏற்கனவே இருந்த 200 மினி பேருந்துகள் தற்போது வரை இயக்கப்படுகிறது. இருப்பினும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், ஏற்கனவே இயக்கப்பட்ட சில வழித்தடங்களில் பேருந்துகளை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து நேதாஜி டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் மாநில துணைத் தலைவர் ராமமூர்த்தி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் 200 மினி பேருந்துகளை இயக்கி வருவதாக கூறிக் கொண்டாலும், அனைத்து பேருந்துகளும் இயக்கப்படவில்லை. குறிப்பாக, புறநகர் பகுதிகளில் இந்த பேருந்துகள் 50 விழுக்காடுதான் இயக்கப்படுகிறது. பெரும்பாலான எம்டிசி பணிமனைகளில் ஒன்று அல்லது இரண்டு சிறிய பேருந்துகள் பழுதாகியோ அல்லது பயன்படுத்தாமலோ நிறுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, ஆவடி மற்றும் மிட்டனமல்லி இடையே இயங்கும் எஸ் 47 (S-47), மிட்டனமல்லி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களால் நல்ல வரவேற்பைப் பெறுகிறது.

ஆவடியின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் சிறிய பேருந்துகளுக்கு அதிக தேவை உள்ளது. ஆனால், எம்டிசி சிறிய பேருந்துகளை குறைந்த அளவில் இயக்குகிறது. திருவேற்காடுக்கு பேருந்து சேவை ஏற்கனவே குறைவாக இருந்தாலும் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் எம்டிசி, அதிக அளவில் சிறிய பேருந்து சேவைகளை இயக்க வேண்டும். இது போல பல வழித்தடங்களில் பாதி அளவே மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை நம்பியிருக்கும் பயணிகள் அதிக பணம் கொடுத்து மற்ற வாகனங்களில் செல்ல கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால் இதன் தொடக்கத்தை ஒப்பிடும்போது, ​​தற்போது இந்த பேருந்துகளில் கூட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது” என்றார்.

இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலரும், தாம்பரம் மாநராட்சியில் உள்ள சிட்லபாக்கம் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவருமான பி.விஸ்வநாதன் கூறுகையில், "சிறிய பேருந்துகள் பிரதான சாலையில் அமைந்துள்ள மெட்ரோ, புறநகர் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவற்றை இணைக்கும் பாலமாக உள்ளது. எனவே, எம்டிசி(MTC) அனைத்து மினி பேருந்துகளையும் இயக்க வேண்டும். தேவையெனில், கூடுதலாக சிறிய பேருந்துகளை கொள்முதல் செய்து சரியான வழித்தடங்களில் இயக்க வேண்டும். பேருந்துகளை குறைத்துள்ளதால், பேருந்துகள் எப்போது வரும் என தெரியாமல் பெரும்பாலானோர் ஆட்டோக்களை தேடிச் செல்லும் நிலை உள்ளது" என கூறினார்.

மேலும், இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் பேசுகையில், "அனைத்து வழித்தடங்களிலும் 50 விழுக்காடுதான் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது தவறான தகவல். ஒரு சில வருடங்களுக்கு முன்பு சில பிரச்னைகளால், சில வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனால், தற்போது இந்த பிரச்னை இல்லை. எனினும் ஒரு சில வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படமால் இருக்கலாம். அதனை வெகு விரைவில் சரி செய்யலாம் என்றும் மேலும் 146 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது" என்றும் கூறினார்.

தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 100 மினி பேருந்துகள் வாங்குவது குறித்த கேள்விக்கு, "அந்த அறிவிப்பு குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மினி பேருந்துகளை கொள்முதல் செய்வது தொடர்பாக முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை" என பதில் அளித்தார்.

இதையும் படிங்க: ''அமைச்சர்கள் மொதுமக்களிடம் பார்த்து கவனமா பேசுங்க...'' முதலமைச்சர் கண்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.