ETV Bharat / state

திமுகவில் இணைந்த பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார்! - திமுகவில் இணைந்த பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார்

சென்னை: பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார், அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

Arasakumar joint into dmk party
திமுகவில் இணைந்த அரசகுமார்
author img

By

Published : Dec 5, 2019, 2:11 PM IST

சில தினங்களுக்கு முன்னர், புதுக்கோட்டையில் நடந்த திமுக இல்லத் திருமண விழாவில் அரசகுமார், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் எனக் கூறியிருந்தார். இதற்கு, பாஜக தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது தன்னை பி.டி. அரசகுமார் திமுகவில் இணைத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரசகுமார் கூறுகையில்; ' திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். திமுக தலைவர் பற்றி யதார்த்த பேச்சை நான் வெளிப்படுத்தியதற்கு, சில நாட்களாகவே நான் கேட்கக் கூடாத வார்த்தைகளை எல்லாம் நான் கேட்டேன்.

என்னுடைய நலம் விரும்பிகள் சிலர் என்னிடம் கூறியதாவது, இனி பாஜகவில் இருக்க வேண்டாம், நீங்கள் திமுகவில் இணைய வேண்டிய இடத்திற்குச் செல்வதற்கான காலம் வந்துவிட்டது எனக் கூறியதின் அடிப்படையில் இன்று என்னை திமுகவில் இணைத்துக் கொண்டேன்.

பாஜக தேசியத் தலைவர்களை விமர்சிக்க விரும்பவில்லை. பாஜகவில் இருக்கும் என்னைப் போன்றவர்கள் உண்மை நிலை உணர்ந்து தற்பொழுதே முடிவை மேற்கொள்ள வேண்டும்.

தாய்க் கழகத்திற்கே நான் மீண்டும் திரும்பியுள்ளேன். சுயமரியாதை இழந்த பின் அங்கிருப்பதில் அர்த்தமில்லை’ எனத் தெரிவித்தார்.

திமுகவில் இணைந்த அரசகுமார்

மேலும், தமிழ்நாடு பாஜகவில் இருந்த என்னை வெளியேற்ற நினைத்தவர்கள் தற்பொழுது மகிழ்ச்சியாக இருப்பார்கள், அது நிரந்தரமல்ல என அரசகுமார் தெரிவித்தார். என்னை திமுகவில் தொண்டனாக இணைத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி என திமுகவில் இணைந்த அரசகுமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லவில்லை: பாஜக துணைத்தலைவர்!

Intro:Body:பிஜேபி மாநில துணை தலைவர் அரசகுமார் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுக வில் இணைத்து கொண்டார்.

சில தினங்களுக்கு முன்னர் புதுக்கோட்டையில் நடந்த திமுக இல்ல திருமண விழாவில் அரசகுமார் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என பேசியிருந்தார். இதற்கு பிஜேபி தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது தன்னை திமுக வில் இணைந்துள்ளார்.

பின்னர் அரசகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவில் தன்னை இணைத்து கொண்டதில் மகிழ்ச்சி என தெரிவித்தார். மேலும் திமுக தலைவர் பற்றி எதார்த்த பேச்சை நான் வெளிபடுத்தியதற்கு சில தினங்களில் நான் கேட்க கூடாத வார்த்தைகளை என் வாழ்நாளில் கேட்டேன் என வருத்தம் தெரிவித்தார். என்னுடைய நலம் விரும்பிகள் இனி இங்கு இருக்க வேண்டாம், நீங்கள் இணைய வேண்டிய இடத்தில் நகர காலம் வந்துவிட்டது எனக்கூறி அழைத்ததன் அடிப்படையில் இன்று என்னை இணைத்துக்கொண்டேன்.

பாஜக தேசிய தலைவர்களை விமர்சிக்க விரும்பவில்லை, பா.ஜ.க வில் இருக்கும் என்னைப் போன்றவர்கள் உண்மை நிலை உணர்ந்து தற்பொழுதே முடிவை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து அவர் பேசுகையில் தாய் கழகத்திற்கே நான் மீண்டும் திரும்பியுள்ளேன்.சுயமரியாதை இழந்த பின் அங்கிருப்பதில் அர்த்தமில்லை என தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க வில் இருந்து என்னை வெளியேற்ற நினைத்தவர்கள் தற்பொழுது மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஆனால் அது நிரந்தரமல்ல. மேலும் என்னை திமுக வில் தொண்டனாக இணைத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி என கூறினார்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.