ETV Bharat / state

கரோனா பாதித்த பெண்ணிற்கு மீண்டும் வேலையைப் பெற்று தந்த துணை ஆணையர்கள்!

author img

By

Published : Jul 20, 2020, 7:11 PM IST

சென்னை: கரோனா பாதிப்பு காரணமாக வேலையிழந்தப் பெண்ணுக்கு மீண்டும் வேலையைப் பெற்று தந்த துணை ஆணையர்களுக்குப் பொது மக்கள் சமூக வலைதளம் வாயிலாகப் பாராட்டி வருகின்றனர்.

துணை ஆணையருக்கு நன்றி தெரிவிக்கும் பெண்
துணை ஆணையருக்கு நன்றி தெரிவிக்கும் பெண்

சென்னை கே.கே நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று மீண்டு வந்துள்ளார். அவர் பணிபுரிந்த குடியிருப்புப் பகுதியில், மீண்டும் வேலைக்குச் சென்றபோது கரோனாவால் பாதிக்கப்பட்டதால் குடியிருப்பு வாசிகள் பயந்து, அந்த பெண்ணை வேலையிலிருந்து நீக்கியுள்ளனர்.

கரோனா காலத்தில் வேலை இழந்து வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்பட்டு கொண்டிருந்த அந்த பெண், அடையாறு காவல் துணை ஆணையர் விக்ரமனின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் வசிக்கும் பகுதி தியாகராய நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட காரணத்தினால், அப்பகுதியின் துணை ஆணையர் ஹரிஹரனுக்கு, இது குறித்து விக்ரமன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தியாகராயநகர் துணை ஆணையர் ஹரிகிரண், அந்தப் பெண்ணின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று உதவி புரிந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட குடியிருப்பிற்கு சென்று அங்கிருக்கும் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் அந்தப் பெண்ணிற்கு வேலையை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இரு துணை ஆணையர்கள் இணைந்து, குடியிருப்பு வாசிகளின் கரோனா பயத்தைப் போக்கி, பெண் ஒருவரின் வாழ்வாதாரத்திற்கு உதவியதை சமூகவலைதளத்தில் அடையாறு துணை ஆணையர் பதிவிட்டுள்ளார். இந்தச் செயலை சமூக வலைதளத்தில் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.