இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழ்வால் இன்று உலகமே மாமல்லபுரத்தை உற்று நோக்குகிறது. வரலாற்றின் ஏடுகளில் முக்கிய இடம் வகிக்கும் இன்றைய நாளை எண்ணி பூரிப்படையும் அதே நேரத்தில், வரலாற்றின் பக்கங்களை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் சீனர்கள் தமிழர்களுக்குப் பங்காளி உறவுகள் என்று புலப்படும். போதி தர்மரை வணங்கும் சீனர்கள் தமிழரின் எல்லையில் கால் பதிப்பது இது முதல் முறை அல்ல!
கி.மு 100இல் வாழ்ந்த சீனப்பயணி பான்-கோவின் வருகை குறிப்புகளும் கி.பி 550 - 600 இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த சீன வரலாற்று ஆசிரியர் மா-டவான்-லியின் வரலாற்று குறிப்புகளும் நம் தமிழரின் பண்பாடு அப்போதே உலகமயமாகிப் போனதற்கான அடையாளங்களாய் நிற்கிறது.
தமிழர்கள் திருக்குறளின் வழி நிற்பவர்கள் என்ற மா-டவான்-லியின் குறிப்புகளின் பிரதிபலிப்பே, அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு வந்த சீனர்களையும் வரவேற்ற தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாடு என்றால் மிகையல்ல.
கி.பி 633இல் புத்தர் பிறந்த இடத்தை தரிசிப்பதற்கும், புத்த மதம் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரிப்பதற்கும் இந்தியாவிற்கு வருகை தந்தார் புத்தத்துறவி யுவான் சுவாங். சுமார் 15 வருடங்கள் இந்தியாவில் அவர் வாழ்ந்த போது, வட இந்தியாவில் ஹர்சரும் தமிழ்நாட்டில் முதலாம் நரசிம்ம வர்மரும் ஆட்சி புரிந்தனர். இங்கு அவர் கண்ட அரிய காட்சிகளையெல்லாம் தன்னுடைய 'சியூக்கி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பல்லாயிரம் மைல் கடந்து இந்தியா வந்து தாயகம் திரும்பிய அவர் 22 குதிரைகளில் விலை மதிக்க முடியாத கல்விச் செல்வங்களை அள்ளிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவான் சுவாங்கின் படைப்புகளை தங்களுடைய பொக்கிஷமாக கருதும் சீனர்களின் அடுத்த வருகை 1956இல் நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராஜர் இருந்த கால கட்டத்தில் அப்போதைய சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரத்திற்கு வருகை தந்தார். தமிழர்களின் கட்டடக்கலை, பண்பாடு என்று அனைத்தையும் பார்த்து வியந்த சீனப்பிரதமர் சூ என்லாயின் பிரிவிடைக்குப் பின்பு மீண்டும் நிகழ்ந்திருக்கும் சீன அதிபரின் வருகை தமிழர்களுடைய நம்பிக்கைக் கீற்றுகளையும் அதே அன்பையும் பரவச் செய்திருக்கிறது.
இதையும் படியுங்க:
மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: செய்திகள் உடனுக்குடன்!

Intro:Body:
சீன தலைவர்களின் ஈர்ப்பு சக்தி
யுவான் சுவாங்.!
------------------------------------
தமிழர்களின் பண்பாட்டு சிறப்புகளில் விருந்தோம்பலுக்கு மு க்கிய இடம் உண்டு. விருந்தினர்களை சிறப்பாக உபசரிப்பவர்களுக்கு வாழ்க்கையில் எந்த குறைவும் வராது என்கிறார், வள்ளுவர். அத்தகைய பண்பாட்டு அடிப்படை கொண்ட தமிழகத்தை சீன அதிபர் ஜின்பிங் தேர்வு செய்ததில் வியப்பதற்கில்லை.
பல்லவ மன்னர்களின் திறந்தவெளி பொக்கிஷக்கூடமான மாமல்லபுரம் சங்ககாலத்திலேயே துறைமுக நகரமாக விளங்கியதற்கு பல சான்றுகள் உள்ளன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன வணிகர்கள் இங்கு வந்து சென்றதை தொல் பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன.
ஆயினும், சீனத் துறவி யுவான்சுவாங் இங்கு வருகை தந்ததுதான் மிகுந்த முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது.
சீனாவில் கிபி 602 இல் பிறந்த யுவான் சுவாங் இளம்வயதிலேயே புத்த துறவியானார். புத்தர் பிறந்த இடத்தை தரிசிப்பதற்கும் புத்த மதம் தொடர்பான பல்வேறு தகவல்களை சேகரிப்பதற்கும் இந்தியா வந்தார்.
27 வயதில் அவர் பயணத்தை தொடங்கிய போதிலும் பல்வேறு மலைகளையும், அடர்ந்த காடுகளையும், கொதிக்கும் பாலைவனங்களையும் ஆழமான ஆறுகளையும் தாண்டி இந்தியா வருவதற்கு நான்கு வருடங்கள் ஆனது.
சுமார் பதினைந்து வருடங்கள் இந்தியாவில் அவர் இருந்தபோது வட இந்தியாவில் பேரரசர் ஹர்சரும் தமிழகத்தில் மாமன்னன் முதலாம் நரசிம்மவர்மரும் ஆட்சிபுரிந்தனர். இருவருடைய அவையிலும் அவர் தங்கியிருந்துள்ளார்.
காஞ்சிபுரம் பல்கலைக்கழகத்தில் அவர் இருந்தபோது ஏராளமான நூல்களைக் கற்றார். இளம் மாணவர்களுக்கு பயிற்றுவித்தார்.
தான் கண்ட அரிய காட்சிகளை தன்னுடைய 'சியூக்கி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நரசிம்மவர்மனின் அன்பிற்கு பாத்திரமான அரசு விருந்தினராக நீண்ட நாட்கள் இருந்துள்ள யுவான் சுவாங், மாமன்னர்கள் மகேந்திரவர்மன் நரசிம்மவர்மன் படைப்புகள் அடங்கிய கலைநகரான மாமல்லபுரத்திற்கு பலமுறை போய் வந்திருக்க வேண்டும்.
பல ஆயிரம் மைல் கடந்து இந்தியா வந்து தாயகம் திரும்பியபோது விலைமதிக்க முடியாத கல்விச் செல்வங்களை 22 குதிரைகளில் அள்ளிச் சென்றார்.அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த சீனர்கள், 'மந்திரி 'ஆகும் வாய்ப்பையும் வழங்கினர். அதை மறுத்து விட்டார் யுவான் சுவாங். அவர் பிறப்பு அதற்காக இல்லையே.!
அவரையும் அவர் படைப்புகளையும் தங்கள் பொக்கிஷங்களில் ஒன்றாக சீனர்கள் கருதுகின்றனர். ஏராளமான சீன யாத்ரீகர்கள் இந்தியாவிற்கு வந்து சென்ற போதிலும் தம் பன்முக ஆளுமையால் தனித்துவம் பெறுகிறார் யுவான் சுவாங்.
இவர் கால் தடம் பதித்த
மாமல்லபுரத்திற்கு கடந்த 1956 ம் ஆண்டு அப்போதைய சீன பிரதமர் சூ என் லாய் வந்தார். அந்த சமயம் தமிழக முதல்வராக காமராஜர் இருந்தார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாமன்னர்களில் நம்முடைய சோழ மன்னன் கரிகாலன் தனித்துவம் பெற்றவன். அவன் கட்டிய கல்லணை நவீன காலபொறியாளர்களால் இன்றைக்கும் வியந்து பார்க்கப்படுகிறது. களப்பிரர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கரிகாலனின் வழித்தோன்றல்கள் சோழ நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்று ஆந்திர பகுதிகளில் வசித்தனர். "காவிரியில் கல்லணை கட்டிய கரிகாலனின் வழித்தோன்றல்கள் நாங்கள்" என்று கல்வெட்டுகளிலும். செப்பேடுகளிலும் பதிவிட்டுக் கொண்டனர். அவை தெற்கு ஆந்திரப் பகுதிகளான கடப்பை, கர்நூல் பகுதிகளில் காணப்படுகின்றன. "ரேனாண்டு சோழர்கள்" என்று அழைக்கப்படும் அவர்கள் பற்றிய குறிப்பு யுவான் சுவாங் எழுதிய சியூக்கி நூலில் உள்ளது. பல்லவ நாட்டின் வட எல்லையில் ஆட்சி செய்த அவர்களை "சோழிய" என்று யுவான்சுவாங் குறிப்பிடுகிறார்.
யுவான்சுவாங் மற்றும்
அவருடைய படைப்புகள் சீனர்களுக்கு மட்டுமின்றி நமக்கும் கருவூலம்தான்.
சூ என் லாயைத் தொடர்ந்து யுவான் சுவாங் அடிநாடி ஜின்பிங் வந்துள்ளார். மாமல்லபுரம் என்னும் பெயர் இன்று உலகம் முழுவதும் ஒலிக்கிறது.
விருந்தோம்பலின் தாயகமான தமிழ் மண்ணில் நடைபெறும், இரு பெரும் தலைவர்களான மோடி-ஜின்பிங் சந்திப்பை உலகமே ஆவலுடன் உற்று நோக்குகிறது.
உலக அமைதி - நன்மையை மையப்படுத்தும் ஒரு முன்மாதிரி பேச்சுவார்த்தையாக இது அமைந்திட வாழ்த்துவோம்.!
- ராசதுரை.
11.10.19
Conclusion: