ETV Bharat / state

நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் தரத்தை உறுதிசெய்ய அரசு நடவடிக்கை - நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம்

நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வுசெய்ய உணவுப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குடல் அப்பளம், வடகம், வத்தல்
குடல் அப்பளம், வடகம், வத்தல்
author img

By

Published : Jan 8, 2022, 9:52 PM IST

சென்னை: பொதுமக்கள், குழந்தைகள் உட்கொள்ளும் நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறைக்குப் பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளன.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 மற்றும் ஒழுங்குமுறைகள், 2011இன்படி குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றின் தரம் வரையறுக்கப்பட்டுள்ளது.

மேற்படி குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் பல நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. இவை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும், அனுமதிக்கப்படாத நிறமிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

புற்றுநோய்

இது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006இன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், தரமற்ற, நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிற்றுப்புண், நாளடைவில் புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குடல் அப்பளம், வடகம், வத்தல் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வடகம், வத்தல் தயாரிக்கும் அனைத்துத் தயாரிப்பாளர்களும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் – 2011இல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ரசீது

மேலும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உத்தரவுப்படி, அப்பளம், வடகம், வத்தல் தயாரிக்கும் அனைத்து உணவு வணிக நிறுவனங்களும், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் பொழுதும், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் நுகர்வோருக்கு வழங்கப்படும் ரசீதுகளில் தங்களுடைய உணவுப் பாதுகாப்பு உரிம எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

கடைகளில் விற்பனை செய்யப்படும் குடல் அப்பளம், வடகம், வத்தல் பொட்டலங்களின் மீதுள்ள லேபிள்களில் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், முழுமையான முகவரி, நிகர எடை, கோடு, பேட்ஜ் எண், தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு ஆகியவை குறித்த விவரங்கள் இடம் பெற வேண்டும். எனவே, பொதுமக்கள் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை கடைகளில் வாங்கும் பொழுது மேற்குறிப்பிட்ட விவரங்கள் உள்ளனவா எனப் பார்த்து வாங்க வேண்டும்.

குடல் அப்பளம்

உணவுப் பாதுகாப்புத் துறையின் மூலம் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகிய 434 உணவு மாதிரிகள் பாகுப்பாய்வு செய்யப்பட்டு 56 உணவு மாதிரிகள் தரமானது எனவும், 301 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றது எனவும், 77 உணவு மாதிரிகள் தரம் குறைவானது மற்றும் தப்புக் குறியிடப்பட்டது எனவும் அறிக்கை பெறப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பற்றது என அறிக்கை பெறப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உற்பத்திசெய்த தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006இன்படி குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் 242 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 99 வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.14,60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தரம் குறைவானது மற்றும் தப்புக் குறியிடப்பட்டது என அறிக்கை பெறப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உற்பத்தி செய்த தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீது மாவட்ட நீதி வழியில் தீர்ப்பு வழங்கும் அலுவலர் நீதிமன்றத்தில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 54 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.7,49,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அனைத்து விற்பனை கடைகளிலும் தொடர் ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை எளிதில் கவரும் நோக்கில் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவை பல வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. போதிய விழிப்புணர்வு இன்றி இவ்வாறு நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிற்றுபுண் மற்றும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மேற்படி குடல் அப்பளம், வடகம், வத்தல் மற்றும் பிற உணவுப் பொருட்களில் உள்ள தரம் பற்றிய குறைபாடு குறித்து 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் செய்யலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இ-வாடகை ஆன்லைன் செயலி, வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.