சென்னை: பாரிமுனை ராஜாஜி சாலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய கட்டட தரம் குறித்து ஐஐடி மேற்கொண்ட ஆய்வறிக்கையை, தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், அதற்கான ஆய்வறிக்கையை வெளியிடாத தமிழ்நாடு அரசைக் கண்டித்து அப்பகுதியில் இருக்கும் சில அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.
கட்டடங்கள் தரம் பற்றிய ஐஐடி அறிக்கை
பாரதப் பிரதமர் வீட்டு வசதி வாரிய ஏஜென்டாக, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செயல்படுவதாகவும் கூறி குடிசை மாற்று வாரியத்தில் குடியிருப்போர் நலக்கமிட்டி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஐஐடி அறிக்கையை வெளியிடக்கோரி, தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், பாரதப் பிரதமர் வீட்டு வசதி வாரிய ஏஜென்டாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செயல்படுவதைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் செபாஸ்டின் கூறுகையில்,
கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய கட்டடங்களின் தரம் குறித்த விவகாரத்தில் கடந்த வாரம் கட்டடம் கட்டிய நிறுவனம் கட்டடம் தரமாக உள்ளதாகவும், கட்டடம் தரம் குறைவாக இருப்பதாகவும் பொய்யானத் தகவல் பரப்புவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால், கட்டடத்தின் தரம் குறித்து ஐஐடி நடத்திய ஆய்வின் தகவலை அரசு மக்களுக்கு கட்டாயம் வெளியிட வேண்டும். மேலும், குடிசை மாற்று வாரியம் சார்பில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த வீடுகளுக்கு பராமரிப்பு என்ற பெயரில் பிரதமரின் வீட்டு வசதி வாரியத்துடன் இணைந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் வசூல் செய்யப்படுகிறது.
பிரதமரின் வீட்டுவசதி வாரியத்துடன் சேர்க்கக் கூடாது
இதனால் ஏழை, எளியோர் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை அரசு கட்டாயம் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பிரதமரின் வீட்டு வசதி வாரியத்தின் ஏஜென்டாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செயல்படுவதை, தமிழ்நாடு அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்' என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதனை அரசு கட்டாயம் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதையும் படிங்க: உயிரிழப்புகளை தடுக்க களமிறங்கும் காவல்துறையினர்...