காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக பதவி வகித்த நடிகை குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நேற்று (அக். 12) பாஜகவில் இணைந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக். 13) குஷ்பூ, காங்கிரஸ் மூளை வளர்ச்சியே இல்லாத கட்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதையடுத்து டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் நாதன் தனது எதிர்ப்பை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "மூளை வளர்ச்சியின்மை தன்மையை பயன்படுத்தி குஷ்பூ காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளதை கடுமையாக எதிர்க்கிறோம். பிறக்கும் 69 குழந்தைகளில் ஒரு குழந்தை மூளை வளர்ச்சி குறைவாக இருப்பது இயற்கை! அப்படி பிறக்கும் குழந்தைகள் எந்த வகையில் சிறுமை? இயலாமை இடித்து அரசியல் எதிரியை விமர்சிப்பது முறையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க... 'மூளை வளர்ச்சியே இல்லாத கட்சி காங்கிரஸ் ' - குஷ்பூ சாடல்