கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலைத் கட்டுப்டுத்தும் விதமாக இன்று முதல் மீண்டும் சில கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.
முகக்கவசம் அணிவது கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கடந்த சில வாரங்களில் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல், 26ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை கடந்த மாதங்களைக் காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதன்படி 51% பேர் ( மால்கள்) முகக்தை முழுமையாக மறைத்து முகக்கவசம் அணிவது தெரியவந்துள்ளது. வீடு, அலுவலக தனி அறை உள்ளிட்ட உட்புறப்பகுதிகளில் (மூக்கு, வாய் பகுதிகளை மறைக்காமல்) 26 % பேர் பெயரளவில் முகக்கவசம் அணிவதும் தெரியவந்துள்ளது.
முகக்கவசமே அணியாதோர்
நகர்பகுதி மக்கள் 53 % பேர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதில்லை என தெரிவித்துள்ளனர். அதேபோல், குடிசைப்பகுதிவாசிகள் 56 % பேரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதில்லை என கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் நடைமுறை