ETV Bharat / state

சைக்கிள் திருட்டால் வேதனையில் சிறுவன்: விரைந்து கண்டுபிடித்த துணை ஆணையர்!

தன் கண்முன்னே திருடப்பட்ட சைக்கிளால் வேதனை அடைந்த சிறுவனின் சைக்கிளை விரைந்து கண்டுபிடித்து கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் மீட்டுக் கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

சைக்கிள் திருட்டால் வேதனையில் சிறுவன்;விரைந்து கண்டுபிடித்த காவல் ஆணையர்!

author img

By

Published : Feb 10, 2022, 10:19 AM IST

சென்னை: சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கிரிஷ் என்ற சிறுவன் வசித்துவருகிறார். கடந்த 3ஆம் தேதி இரவு அடுக்குமாடி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது குடியிருப்பில் நிறுத்திவைத்திருந்த சிறுவனின் சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் சென்றார்.

திருடிச் செல்வதைக் கண்ட சிறுவன் துரத்திச் சென்று திருடனைப் பிடிக்க முயன்றார். ஆனால் திருடன் சைக்கிளுடன் தப்பிச் சென்றார். இதனால் மனமுடைந்த சிறுவன் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சைக்கிள் திருடுபோனதால் கடந்த சில நாள்களாகவே சிறுவன் மனவேதனையோடு இருந்துவந்துள்ளார்.

சிறுவன் கிரிஷ் வேதனையை அறிந்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் இது தொடர்பாக விரைந்து கண்டுபிடிக்கும்படி தனிப்படை காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

தனிப்படை காவல் துறை

சைக்கிள் திருட்டால் வேதனையில் சிறுவன்; விரைந்து கண்டுபிடித்த காவல் ஆணையர்!

காவல் துறையினர் அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில், அடையாளம் தெரியாத நபர் நைசாக அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்து சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் செல்கிறார். பிறகுச் சைக்கிளைத் திருடிச் செல்கிறார். தன்னுடைய சைக்கிளைத் திருடிச் செல்வதைக் கண்டு சிறுவன் கிரிஷ் துரத்திச் செல்வது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை காவல் துறையினர் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சைக்கிளைத் திருடிச் சென்ற மாங்காடு பகுதியைச் சேர்ந்த அஸ்ரர் (22) என்பவரை காவல் துறையினர் கைதுசெய்து அவரிடமிருந்து சிறுவனின் சைக்கிள் பறிமுதல்செய்யப்பட்டது.

சிறுவனுக்கு சர்பிரைஸ் கொடுத்த காவல் ஆணையர்!

பறிமுதல்செய்யப்பட்ட சைக்கிளை கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் சிறுவனின் வீட்டிற்குச் சென்று சைக்கிளைக் கொடுத்து சிறுவனை ஆச்சரியப்படுத்தி உற்சாகப்படுத்தினார். தன்னுடைய சைக்கிளைக் கண்ட சிறுவன் கிரிஷ் மகிழ்ச்சியில் காவல் துறைக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

சிறுவன் கண்ணெதிரே திருடன் சைக்கிளைத் திருடிச் சென்றதால் மனதளவில் சிறுவனுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற எண்ணத்திலேயே துரிதமாகச் செயல்பட்டு சைக்கிளை மீட்டதாகத் தனிப்படை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் என்றுமே காவல் துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக இந்தச் செயல் இருப்பதாக சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

இதையும் படிங்க:மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை - ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தகவல்

For All Latest Updates

TAGGED:

Cycel
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.