இலங்கையை சேர்ந்த முகமது ஷபீர் என்பவர் துபாயக்கு செல்ல இலங்கையில் இருந்து சென்னை வந்தார். பின் இங்கிருந்து துபாய் செல்ல திட்டமிட்டிருந்தார்.
அப்போது விமானப் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது முகமது ஷபீரையும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின் அவரை கைதுசெய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்தக் கடத்தலில் ஷபீருக்கு துணையாக இருந்த மற்றொருவரையும் தீவிரமாக தேடிவருகின்றனர். இப்பணம் ஹவாலா பணம் என்று சுங்கத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.