ETV Bharat / state

’உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை’ - அமைச்சர் காமராஜ் - Advisory meeting Minister Kamaraj

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

kamaraj
kamaraj
author img

By

Published : May 13, 2020, 4:08 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அவரது துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் காவல் துறை இயக்குநர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அனைத்து உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசுகையில், ”ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்குவதற்கும், வழக்கமாக வழங்கப்படும் உணவு மானியத்தைக் காட்டிலும் கூடுதலாக மூன்றாயிரத்து 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் 845 கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள இரண்டு லட்சத்து 92 ஆயிரத்து 912 குடும்ப அட்டைதாரர்களில் இதுவரை இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 120 குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருள்களும் நியாயவிலைக்கடை பணியாளர்களைக் கொண்டு நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24.03.2020-லிருந்து 11.05.2020 வரை அதாவது கடந்த 49 நாட்களில் இரண்டு லட்சத்து 87 ஆயிரத்து 004 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, இந்த ஆண்டு இதுவரை 22.51 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் மேற்கண்ட உறுதியான நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் - தரையில் கொட்டி மக்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.