ETV Bharat / state

'திமுக ஆட்சியில் சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரிப்பு!' - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி ஏற்பட்ட நாள் முதல், சர்வ சாதாரணமாகக் கொலை, கொள்ளை அதிகளவில் நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Oct 1, 2021, 10:35 PM IST

சென்னை: திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைந்து, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் கடந்த ஐந்து மாத கால திமுகவின் விடியா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைந்து, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளது. 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தமிழ்நாட்டில் வடமாநிலக் கொள்ளையர்கள், தமிழ்நாடு குற்றவாளிகளின் அட்டகாசம் அதிக அளவிலிருந்தது.

குற்றங்கள் குறைவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காவல் துறைக்கு முழுச் சுதந்திரம் அளித்து, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டதன், காரணமாகக் குற்றவாளிகள் அடக்கி ஒடுக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்பட்டு, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. அதிமுக அரசும் இரும்புக் கரம் கொண்டு எடுத்த நடவடிக்கைகள் காரணமாகக் குற்றங்கள் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டன.

ஹெராயின் கடத்தல்

கடந்த ஐந்து மாதங்களாக வடமாநிலங்களைச் சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், சர்வ சாதாரணமாக விமானத்தில் வந்திறங்கி தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில் வங்கிக் கொள்ளை, செயின் பறிப்பு, ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அதேபோல் திமுக பிரமுகர்கள், காவல் துறையினர், அரசு ஊழியர்களை மிரட்டுவதும், மணல் கடத்தலும் பல இடங்களில் நடப்பதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கஞ்சா, ஹெராயின், குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்பனையும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

கடந்த வாரத்தில் தமிழ்நாட்டில் அனைத்து ஊடகங்களிலும், செய்திகளிலும் பெரிய அளவில் பேசப்பட்ட குற்றச் சம்பவங்கள் வட மாநிலமான குஜராத், ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் சிக்கிய விவகாரம்தான். இது தொடர்பாக ஆந்திராவிலும், சென்னையிலும் பலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

தேசிய நுண்ணறிவு அமைப்பின் வேட்டை தீவிரமாகி உள்ளதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. போதைப்பொருள்கள் அந்நிய நாடுகளிலிருந்து, நம் நாடு முழுவதும் கடத்தி விற்பதற்கு வழித்தடமாக இருப்பது ஜனநாயகத்தில் பற்றுள்ளவர்களை உலுக்குகிறது. அதனால் போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று காவல் துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன்.

சர்வ சாதாரணமாகக் கொலை

பசுபதி பாண்டியன் கொலையில் சம்பந்தப்பட்டதாகக் கருதி ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு, அவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்ட அவலம். வாணியம்பாடியில் இஸ்லாமியச் சகோதரர் தொழுகை முடிந்து வரும்போது 7 வயது மகன் கண் முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்,

தாம்பரம் ரயில் நிலையம் அருகே இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி ஏற்பட்ட நாள் முதல், சர்வ சாதாரணமாகக் கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன.

இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இப்படி குற்றச் சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாடு மக்களைப் பீதியில் ஆழ்த்துவதோடு மட்டுமல்லாமல், கொதிப்படையவும் வைத்துள்ளது.

பீதியில் மக்கள்

இந்த விடியா திமுக ஆட்சியில் சமூகவிரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த அரசின் இயலாமையை உணர்ந்த ஆளுநர், தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் அழைத்து வழங்கிய அறிவுரைக்குப் பின், சுமார் 12,000 பேர் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

இதில் 2,000 பேர் வரை ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், மேலும் சுமார் 1,750 பேர் வரை நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெற்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 8,000 நபர்கள் யார், அவர்களது நிலை என்ன அவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள் என்று தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடியல் பிறக்கும் என்று திமுக அளித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள், நாள்தோறும் விடிந்தால் என்ன தகாத சம்பவங்கள் தங்களைச் சுற்றி நடக்குமோ என்ற பாதுகாப்பற்ற நிலையில், பீதியில் உறைந்துபோய் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு மேலும் சீரழியாமல், மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்த ஆட்சியாளர்களுக்கு உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நாட்டில் பெருகிவரும் குற்றச் சம்பவங்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளை அடக்குவதும், மக்களைச் சுதந்திரமாகப் பயமின்றி இயங்கவைப்பதும், காவல் துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் தலையாய கடமையாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.