ETV Bharat / state

சென்னை தீவுத் திடலில் தொடங்கிய பட்டாசு விற்பனை.. இந்த ஆண்டு புது வரவு என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 9:41 PM IST

Chennai Theevu Thidal Crackers: சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ள நிலையில், 200க்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தீவுத்திடலில் தொடங்கிய பட்டாசு விற்பனை
தீவுத்திடலில் தொடங்கிய பட்டாசு விற்பனை

தீவுத்திடலில் தொடங்கிய பட்டாசு விற்பனை

சென்னை: சென்னை தீவுத் திடலில், பட்டாசு பஜார் 2023ஐ தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்தி வருகிறது. மேலும் இந்த முறை அதிக அளவில் புதிய ரக பட்டாசுகளான கிரிக்கெட் பால், பேட், ஹெலிகாப்டர், கூல்டிரிங்க்ஸ் டின் ப்ளவர் பாட், தாமரை மலர், டாப் கன் 27, லெமன் சோடா, கலர் கிரிஸ்டல், குடை கம்பி மத்தாப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளன என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதே போல் பசுமை பட்டாசுகளும் விற்பனையானது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த தீவுத்திடலில் சுமார் 55 பட்டாசு கடைகளுக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதில், சிவகாசியிலிருந்து நேர்முகமாக, அனைத்து வகையான நிறுவனங்களிலிருந்து பட்டாசுகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகி ஷேக் அப்துல்லா கூறுகையில், ” தீவுத்திடலில், சுமார் 55 பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சிவகாசியிலிருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு இங்கு விற்பனைக்கு வைத்துள்ளோம். இந்த முறை பெரியவர்கள் வெடிக்கும் வெடிகள் அதிகளவில் விற்பனைக்கு வரவில்லை.

முழுமையாகக் குழந்தைகளுக்கான பசுமை பட்டாசுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் இரவு வான வெடிகள் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தற்போது கூட்டம் வரவில்லை. ஆனால் மாலை நேரங்களில் ஓரளவு கூட்டம் வருகிறது” எனக் கூறியுள்ளார்.

பின்னர் சில பட்டாசு வியாபாரிகள் கூறுகையில், "இரவு வான வெடிகள் 120 ஷாட் முதல் 1,000 ஷாட் வரை இந்த முறை விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், 16 முதல் 70 எண்ணிக்கையிலான பட்டாசுகள் இருக்கும் வகையிலான கிப்ட் பாக்ஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும் இந்த முறை 200க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புதிய ரக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதன்படி, ப்ளையிங் பேர்டு, ப்ளையிங் சக்கர், கலர் பென்சில், கோல்டன் டக், ரெயின்போ (ஒரே நேரத்தில் 7 விதமாக வெடிக்கும்), மல்டி கலர் கம்பி மத்தாப்பு (ஒரே கம்பி மத்தாப்பில் 4 கலர்) உள்ளிட்ட பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது. இது மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 18,000 போலீசார் குவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.