ETV Bharat / state

'பாஜகவால் உருவாக்கப்பட்டவர் கமல்' - முத்தரசன் - Tamil Nadu Legislative Assembly Election

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி திமுகவின் வாக்குகளைப் பிரிக்க பாஜகவால் உருவாக்கப்பட்டது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

cpi mutharasan attacked Kamal was formed by the BJP to divide the votes

author img

By

Published : Mar 11, 2021, 5:00 PM IST

சென்னை: எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து இன்று திமுகவுடன் ஆலோசிக்கப்பட்டு, தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

cpi mutharasan attacked Kamal was formed by the BJP to divide the votes
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்

அதன்படி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திருத்துறைப்பூண்டி (தனி), தளி (தனி), பவானிசாகர், திருப்பூர் வடக்கு, வால்பாறை, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்தரசனும் கட்சிப் பிரதிநிதிகள் முன்பு கையெழுத்திட்டனர்.

சிபிஐ-திமுக தொகுதி பங்கீடு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், " மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி திமுகவின் வாக்குகளைப் பிரிக்க பாஜகவால் உருவாக்கப்பட்டது" என குற்றஞ்சாட்டினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.