இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 480 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆகவும், சென்னையில் 6,750ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் 634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,172ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா? - நாளை ஆலோசனை!