நாகை: நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் ராஜேஷ், கரோனா தொற்று காரணமாக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி, ராஜேஷ் திடீரென உயிரிழந்தார்.
மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் பிற வார்டுகளுக்கு மாற்றப்பட்டதாகவும், அப்போது, ஆக்ஸிஜன் சப்ளையை நிறுத்தியதால் தனது கணவர் மரணமடைந்து விட்டதாகவும், ராஜேஷின் மனைவி சுபா குற்றம் சாட்டினார்.
இச்சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இதுதொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய, மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: போலீஸ் தாக்கியதலில் வியாபாரி மரணம்: சேலம் சரக டிஐஜி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு